கண் தெரியாத யானையை ஆந்திராவுக்கு கொடுத்ததா கர்நாடகா? - பவன் கல்யாண் கொண்டு வந்த கும்கிகளின் நிலை என்ன?

Hero Image
BBC

ஆந்திராவில் யானை தாக்கியதில் மற்றொரு விவசாயி உயிரிழந்துள்ளார்.

ஜூலை 26 அன்று, சித்தூர் மாவட்டம், சோமலா மண்டலம், கோத்தூரில் ஒரு விவசாயி தனது வயலில் யானைகளால் மிதித்து கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மூன்று நாட்களாக யானைகள் அங்கே இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யானைத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கர்நாடகாவிலிருந்து கொண்டு வந்த யானைகள் என்ன செய்கின்றன என்பதை பிபிசி கண்டறிய முயன்றது.

நான்கு கும்கி யானைகள்

இந்த ஆண்டு மே மாதத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முன்னிலையில், நான்கு கும்கி யானைகளை ஆந்திராவுக்கு அளித்தார்.

மொத்தம் ஆறு கும்கி யானைகளை வழங்குவதாகக் கூறிய கர்நாடகா, அவற்றில் இரண்டு யானைகளுக்கான பயிற்சி இன்னும் முடிவடையவில்லை என்று கூறியது.

பெங்களூருவில் உள்ள விதான் சவுதா அருகே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வில் யானைகள் ஓப்படைக்கப்பட்டன.

பவன் கல்யாண் சால்வை மற்றும் தலைப்பாகையுடன் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அந்த யானைகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் அளித்தார்.

பின்னர் , பவன் கல்யாண் அவர்கள் 'கஜ பூஜை' எனும் யானை வழிபாட்டை நடத்தி, அவற்றை ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

தேவா, கிருஷ்ணா, அபிமன்யு, ரஞ்சன் ஆகிய யானைகளுடன் இரண்டு மாதங்கள் கர்நாடக யானைப் பாகன்கள், ஆந்திர பாகன்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Newspoint
BBC பவன் கல்யாண் அவர்கள் 'கஜ பூஜை' எனும் யானை வழிபாட்டை நடத்தி, அவற்றை ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
  • உடுமலையில் புலிப்பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம் - என்ன நடந்தது?
  • நாகத்தை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை - என்ன நடந்தது?
  • பாகிஸ்தான்: சிங்கம், புலிகளை வளர்த்து, விற்க தனி பண்ணை - வனத்துறை சோதனையில் என்ன நடந்தது?
கும்கி யானைகள் இப்போது எங்கே உள்ளன?

கர்நாடகாவிலிருந்து வந்த இந்த நான்கு கும்கி யானைகளும், தற்போது சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேரு அருகே வனத்துறையால் புதிதாக நிறுவப்பட்ட முகாமில் உள்ளன.

இருப்பினும், இந்த யானைகளில் ஒன்று பார்வை இழந்தது என்றும், மற்றொன்று நிலையான மனநலனுடன் இல்லையென்றும், மற்ற இரண்டும் அடிப்படையில் பயனற்றவை என்றும் சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, அந்த யானைகளின் சுமையைத் தாங்க முடியாத கர்நாடகா, அவற்றை ஆந்திராவிடம் ஒப்படைத்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது.

இதன் மூலம், பிபிசி அந்தப் பகுதிக்குச் சென்று அத்தகைய விமர்சனத்திற்குப் பின்னால் உள்ள உண்மைகளை ஆராய முயன்றது.

பிபிசி முதலில் பலமனேரு அருகே உள்ள யானை முகாமுக்குச் சென்றது.

அப்போது, கும்கி யானைகள் தீவனம் தேடுவதற்காக முகாம் இருக்கும் உள்ள காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டபோது, பிபிசியும் அந்தப் பகுதிக்குச் சென்று அந்தச் சூழலைப் பார்வையிட்டது.

முதலில் சிறிய யானைகளாகக் காட்சியளித்த கிருஷ்ணன் மற்றும் அபிமன்யுவை காடுகளின் வழியாக எப்படி ஓட்டிச் செல்வார்கள் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த யானைகளைத் தற்போது முக்கிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்றும், அவை எதிர்கால நடவடிக்கைகளுக்கான யானைகள் என்றும் அதிகாரிகள் பதிலளித்தனர்.

ஊடகங்கள் 'பைத்தியம் பிடித்ததாக' கூறும் ரஞ்சன் யானை தற்போது கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பெரிய தடிகளைக் கொண்டு ஒரு கூண்டை அமைத்து அதில் ரஞ்சனை அடைத்துள்ளனர்.

ரஞ்சனின் நடத்தை மாறியது. யாராவது அதனை அணுகும்போதெல்லாம் அந்த யானை பதட்டமடைந்தது.

"ரஞ்சனின் பயிற்சி இன்னும் முடிவடையவில்லை. அதனுடன் இருந்த பாகன் வெளியேறியதிலிருந்து, அது இங்குள்ள பாகனுடன் பழகவில்லை. அது இன்னும் முழுமையாக ஆந்திர பாகனின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. அதற்கு இன்னும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் ரஞ்சனை இப்படியே வைத்திருக்கிறோம்" என்று அதிகாரிகள் கூறினர்.

கும்கி யானைகளில் ஒன்று பார்வையற்றது என்று எழுந்துள்ள விமர்சனம் குறித்து, அதிகாரிகளிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

தேவா என்ற யானையைப் பார்க்கச் சென்ற பிபிசி, அது மிகவும் சாதாரணமாகத்தான் உள்ளது என்பதைக் கண்டறிந்தது.

"தேவா என்ற யானைக்கு ஒரு கண் இல்லை. இங்கு கொண்டு வரப்பட்டபோது அப்படித்தான் இருந்தது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newspoint
BBC கும்கி யானைகள் தீவனம் தேடுவதற்காக முகாம் இருக்கும் உள்ள காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டபோது, பிபிசியும் அந்தப் பகுதிக்குச் சென்று அந்தச் சூழலைப் பார்வையிட்டது. இந்த யானைகள் உண்மையில் வேலை செய்கின்றனவா?
Newspoint
BBC சித்தூர் மாவட்ட வன அதிகாரி பரணி

கர்நாடகாவிலிருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட இந்த யானைகள், மாநிலத்தின் தேவைகளுக்கு, அதாவது கிராமங்கள் மற்றும் பண்ணைகளைத் தாக்கும் யானைகளை விரட்டுவதற்குப் பயன்படாது என்ற ரீதியில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து சித்தூர் மாவட்ட வன அதிகாரி பரணி பிபிசியிடம் பேசினார்.

"கும்கி யானைகள் தங்கள் பாகன்களைத் தவிர வேறு யாருடைய பேச்சையும் கேட்காத யானைகள். நாங்கள் அவற்றைப் பயிற்றுவித்தோம். இங்குள்ள பாகன்களை கர்நாடகாவைச் சேர்ந்த பாகன்களுடன் இணைத்து பயிற்சி அளித்தோம். இப்போது நாங்கள் அதற்கானப் பயிற்சியில் இருக்கிறோம்," என்று பரணி கூறினார்.

"இந்தப் பயிற்சிக்காக சித்தூர், அண்ணாமலை மற்றும் திருப்பதி மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேரை நாங்கள் அழைத்துச் சென்றோம். இந்தப் பயிற்சி ஒரு மாதம் நடந்தது. நாங்கள் அவர்களை இங்கு பயன்படுத்துகிறோம். பொதுப் பயிற்சி முடிந்ததும், அவர்களுக்கு யானைகளுடன் இணைந்து வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட நான்கு யானைகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பரணி கூறினார்.

"காட்டு விலங்குகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவை ஏற்கனவே யானைகள் இருக்கும் இடத்திற்கு வருவதில்லை. யானைகள் நாம் கொடுக்கும் கட்டளைகளைக் கேட்கின்றன. அதனால், காட்டு யானைகள் வரும்போது, நாங்கள் பயிற்சி பெற்ற யானைகளை எடுத்துச் சென்று சத்தம் எழுப்புகிறோம். இது அவை மறுபக்கத்திலிருந்து வருவதைத் தடுக்க உதவுகிறது," என்று அவர் விளக்கினார்.

அதேபோல் தேவா என்ற யானைக்கு பார்வைக் குறைபாடு உள்ளது என்பது சரியல்ல என்றும், அது காயமடைந்த யானை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பேசிய பரணி , "இது யானைகளை விரட்ட பயன்படுத்தப்படும்போது காயமடைந்தது. இந்த யானை முற்றிலும் பார்வைத் திறன் அற்றது எனச் சொல்வது சரியல்ல. இது ஒரு காயம் மட்டுமே. அங்கிருந்து கொண்டு வரப்பட்டபோது அந்த யானை காயமடைந்தது.

ஆனாலும், தேவா பல கட்டளைகளைக் கேட்கிறது. கள நடவடிக்கைகளுக்கு அதை கூட்டிச்செல்லும்போது, அதன் செயல்திறனைப் பார்க்கும்போது, அது மிகவும் திறமையானதாகத் தெரிகிறது," என்கிறார்.

மனநிலை சரியில்லாமல் இருப்பதாக விமர்சிக்கப்பட்ட ரஞ்சன் கூண்டில் அடைக்கப்பட்டது. பரணி அதைக் குறித்தும் விளக்கம் அளித்தார்.

"அந்த யானை உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறது. நாங்கள் அதற்கு கட்டளைகள் கொடுத்து பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சி சில காலம் நீடிக்கும். பிறகு அதற்கு ஒன்றன்பின் ஒன்றாக கட்டளைகளைக் கற்பிக்க வேண்டும்.

அந்த வகையில், நாங்கள் அதை முழுமையான வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டும். கும்கி தன் தாய் பாகனின் பேச்சை மட்டுமே கேட்கிறது. அனைத்து கும்கி யானைகளுக்கும் அவற்றின் தாய்ப் பாகன்களுடன் பயிற்சி அளித்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

  • தமிழ்நாட்டில் வீட்டிற்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க புதிய செயலி அறிமுகம் - எவ்வாறு செயல்படும்?
  • கிர் சிங்கங்கள் சிறுநீர் மூலம் பிற விலங்குகளுக்கு அனுப்பும் சமிக்ஞை என்ன?
  • ரகசிய ஒலி எழுப்பும் தாவரங்கள், புரிந்து கொண்டு செயலாற்றும் விலங்குகள் - ஆய்வில் புதிய தகவல்
கிருஷ்ணா மற்றும் அபிமன்யு என்ன நிலையில் உள்ளன?
Newspoint
BBC கர்நாடகாவின் மதிப்பீடுகளின்படி, நான்கு கும்கிகளைப் பராமரிக்க ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு 25 லட்சம் வரை செலவாகும்

இதுபோன்ற சிறிய யானைகளால் எந்தப் பயனும் இல்லை என்று விமர்சனத்துக்கு உள்ளாகும் கிருஷ்ணா மற்றும் அபிமன்யு குறித்து சித்தூர் டிஎஃப்ஓ பரணி விளக்கம் அளித்தார்.

"அவை 15, 16 வயதுடையவை. முழுமையாகப் பயிற்சி பெற்றிருக்கின்றன. எங்களது கட்டளைகள் அனைத்தையும் கேட்கின்றன. மேலும், எங்கள் பகுதிக்கேற்ப கூடுதல் கட்டளைகளையும் கற்றுக்கொடுக்கிறோம். அவை இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் முன்னணி களங்களில் பணியில் ஈடுபடும்," என்று பரணி கூறினார்.

கர்நாடகாவின் மதிப்பீடுகளின்படி, நான்கு கும்கிகளைப் பராமரிக்க ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு 25 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த யானைகளில் ஒன்று பார்வைத் திறன் அற்றது, மற்றொன்று மனநலம் சரியில்லாதது, மற்ற இரண்டு சிறிய யானைகள் பயனற்றவை என்றும், கர்நாடக அரசு அவற்றின் சுமையைத் தாங்க முடியாமல் நம்மிடம் ஒப்படைக்கிறது என்றும் எழுந்த விமர்சனங்களை பரணி நிராகரித்தார்.

"இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. ஒவ்வொரு யானைக்கும் நாங்கள் உடல்நலப் பரிசோதனை செய்துள்ளோம். சான்றிதழ் அளித்த பிறகு, அவை தகுதியற்றவை என்று சொல்வது சரியல்ல.

பயிற்சியில் பல கட்டளைகள் உள்ளன. அவை எப்போது கொடுக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். எத்தனை கட்டளைகளைக் கேட்கிறது, அது எவ்வாறு அசைவுகளைச் செய்கிறது என்பது பாகனுக்குத் தெரியும். இப்போது, சில நாட்களில் ரஞ்சனும் தேவாவும் எங்கள் பயணங்களில் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள்," என்று அவர் தெரிவித்தார்.

  • நஞ்சுள்ள பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி? புதிய கையேடு வெளியீடு
  • இந்தியாவில் தனது 'அசைவ பாலை' விற்க விரும்பும் அமெரிக்கா
  • பாம்பை பிடித்து மாலை போல கழுத்தில் சுற்றியிருந்த நபர் - அதனிடமே கடிபட்டு இறந்த அவலம்
புதிய யானைகளுடன் ஜெயந்த் மற்றும் விநாயக்
Newspoint
BBC கர்நாடகாவிலிருந்து புதிதாக வந்த கும்கி யானைகளுடன், ஜெயந்த் மற்றும் விநாயக் ஆகிய யானைகளும் அங்கு காணப்பட்டன

கர்நாடகாவிலிருந்து புதிதாக வந்த கும்கி யானைகளுடன், ஜெயந்த் மற்றும் விநாயக் ஆகிய யானைகளும் அங்கு காணப்பட்டன, ஏற்கனவே யானைகளை விரட்டுவதில் நன்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகள் தான் அவை இரண்டும்.

இந்த யானைகள் குறித்து பிபிசி முன்பு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

ஜெயந்த் மற்றும் விநாயக் ஆகிய இரண்டு யானைகளும், ஏன் இந்த நான்கு யானைகளுடன் வைக்கப்பட்டன என்பதை பரணி விளக்கினார்.

"ஒரு யானையை பிடிப்பதற்கு இரண்டு யானைகளோ, நான்கு யானைகளோ போதாது. குறைந்தது ஆறு யானைகளோ அல்லது அதற்கு மேற்பட்ட யானைகளோ இருந்தால், தான் அவற்றைப் பிடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியடையும். இல்லையென்றால், அந்த முயற்சிகள் அனைத்தும் தலைகீழாக மாறக்கூடும். அது தனி பிரச்னையாக மாறும். அதனால்தான் அவற்றுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்த அவற்றை வைத்திருந்தோம்," என்று அவர் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் கும்கியை எல்லா பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று இதுதான் தீர்வு என்று சொல்ல முடியாது. எந்தப் பகுதியில் கும்கி யானைகளைப் பயன்படுத்துவது என்பது அறிவியல் பூர்வமான முடிவு செய்யவேண்டிய ஒன்று. யானைகள் மக்களைத் தாக்கும் சந்தர்ப்பங்களில் கும்கி யானைகளை நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போது வேறு ஒரு உத்தியைப் பயன்படுத்த வேண்டும்," என்றும் பரணி கூறினார்.

துணை முதல்வர் பவன் கல்யாணின் அலுவலகத்தைச் சேர்ந்த உதவி வனப் பாதுகாவலர் என்.வி. சிவராம் இது குறித்து பிபிசியிடம் பேசினார்.

"கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட நான்கு கும்கி யானைகளில் ஒன்றுக்கு கண்ணில் பிரச்னை உள்ளது. கர்நாடக அரசு இது குறித்து முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவித்திருந்தது. கண்ணில் பிரச்னை இருந்தபோதிலும், அந்த யானை அற்புதமாக வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள மூன்று யானைகளில், இரண்டு இளம் யானைகள். அவை முழுமையாக வேலை செய்யத் தொடங்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். சிறு வயதிலிருந்தே இங்குள்ள சூழலுக்குப் பழகுவதற்காக அவற்றை இங்கு கொண்டு வந்துள்ளோம்," என்று சிவராம் கூறினார்.

"அந்த நான்கு யானைகள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றாலும், இங்குள்ள சூழ்நிலைக்கு பழகும் கட்டத்தில்தான் அவை உள்ளன. தற்போது அவை பயன்படுத்தத் தயாராக இல்லை. வனத்துறை அவற்றை விரைவில் பணிக்கு ஈடுபடுத்துவதற்காக தயார்படுத்தி வருகிறது. யாரும் முழுமையான புரிதல் இல்லாமல் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது," என்றும் அவர் தெரிவித்தார்.

  • வீதிக்கு வந்த 'செல்லப்பிராணி': சிங்கத்தால் தாக்கப்பட்ட தாய், 3 குழந்தைகள் என்ன ஆயினர்?
  • இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா?
  • "இரைச்சலால் திமிங்கலங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்" - ஒலி மாசுபாடு கடல்வாழ் உயிரினங்களை எப்படி பாதிக்கிறது?
பாகன்கள் என்ன சொல்கிறார்கள்?
Newspoint
BBC கும்கிகளுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சித்தூர், அண்ணாமலை மற்றும் திருப்பதி மாவட்டங்களைச் சேர்ந்த 17 யானைப் பாகன்களுக்கு கர்நாடகாவில் கும்கிகளுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் ஒரு மாதம் பயிற்சி பெற்றதாகவும், யானைகளை எவ்வாறு கையாள்வது, யானை தூங்கும்போது அதை எவ்வாறு எழுப்புவது, அதை எப்படி படுக்கச் சொல்வது, அதை எப்படி நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வது என்பது குறித்து பயிற்சி பெற்றதாகவும் கோவிந்தசாமி எனும் பாகன் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Newspoint