தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி தம்பியாக நடித்தவர் யார் தெரியுமா? ஆச்சரியமா இருக்கே!
Thalaivan Thalavi: விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த பிரபலம் குறித்து ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பெரிய வாரிசு நடிகர்கள் மட்டுமே உயர முடியும் என்ற எண்ணத்தை சில நடிகர்கள் தான் உடைப்பார்கள். அப்படி முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்தவருக்கு பிட்சா படம் பெரிய வாய்ப்பை கொடுத்தது.
அதை தொடர்ந்து நடிப்பில் தொடர்ச்சியாக பல படங்கள் வெளிவந்தது. ஒரு கட்டத்தில் வருடத்திற்கு 6க்கும் அதிகமான படங்களை நடித்து வந்தார். கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி கொண்டார். சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்தார்.
திடீரென மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்த அவருக்கு தொடர்ச்சியாக வில்லன் கேரக்டர்களே கிடைத்தது. ரஜினிகாந்தின் பேட்ட, கமலின் விக்ரம், ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என தொடர்ந்து பல படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து அப்படியே படங்கள் வர இனிமேல் வில்லனாக நடிக்கவே மாட்டேன் என அறிவித்தே விட்டார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மகாராஜா மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது. இந்தியாவை தாண்டி கிட்டத்தட்ட சைனீஷ் மொழிக்கு டப்பிங் செய்தும் படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினர்.
தற்போது அவர் நடிப்பில் தலைவன் தலைவி வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்த ரோஹன் அவரின் உண்மையான மேனேஜராம்.
இவரை அலுவலக பணிக்கு மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களில் ஒரு சின்ன ரோலை கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். ரோஹன் இதற்கு முன்னர் டிஎஸ்பி படத்திலும் அவருடன் போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.