Pandian Stores2: கதிர் பிசினஸுக்கு தொடரும் பிரச்னை… பாண்டியனை நடு தெருவில் இறக்கிவிட்ட சம்பவம்!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
பாண்டியன் கதிருக்காக கையெழுத்து போட வந்தாலும் பேங்கில் லோன் கிடைக்காமல் போக இருவரும் சோகமாக கிளம்பி வண்டியில் சென்று கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் பாண்டியன் கதிருடன் பேசிக்கொண்டு செல்கிறார்.
நீ ஏன் இந்த டிராவல்ஸ் பிசினஸ் செய்ற அதுக்கு மளிகை கடை இல்ல சூப்பர்மார்க்கெட் வைக்க வேண்டியதுதானே என்கிறார். ஆனால் கதிர் அதெல்லாம் எனக்கு செட்டாகாது எனக் கூறிவிட பின்னர் பாண்டியன் பேசாம அரியர்ஸை எழுதிவிட்டு நல்ல வேலைக்கு போக வேண்டியதுதானே எனக் கூறுகிறார்.
ஆனால் கதிரும் அதற்கு விடாப்பிடியாக பேசி ஒருக்கட்டத்தில் பாண்டியனை நடுவழியில் இறக்கிவிட அவரும் இனிமே உன் கூட வந்தா எனக்கு நெஞ்சுவலி வந்துடும் எனத் திட்டிவிட்டு செல்கிறார். வீட்டில் பழனி மற்றும் கோமதி பேசிக்கொண்டு இருக்க அப்போது சுகன்யா வருகிறார்.
டீத்தூள் எங்க இருக்கு எனக் கேட்க அங்க தான் இருக்கும் போய் பாரு என கோமதி அலட்சியமாக பேசி அனுப்பிவிடுகிறார். பின்னர் அவர் பழனியிடம் பேசிவிட்டு கிச்சனுக்குள் செல்ல சுகன்யா வந்து பழனியிடம் சத்தம் போடுகிறார். உடனே பழனி இப்போ நான் ஒரு சத்தம் கொடுத்தா எங்க அக்கா வந்துரும்.
அது மாமாக்கு போன் பண்ணும். அவரு வந்து உன்னை உங்க வீட்டுக்கே அனுப்பிடுவாரு எனத் திட்டிவிடுகிறார். அந்த நேரத்தில் கோமதி வந்து என்ன பேசிட்டு இருக்க எனக் கேட்க சுகன்யா என்ன உங்க அக்கா முந்தானையை பிடிச்சிட்டே திரிவதாக கேட்கிறார்.
உடனே கோமதியும் சுகன்யாவிடம் திமிராக திட்டிவிட்டு அப்படிதான் என் தம்பி என்னுடன் தான் இருப்பான் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் சரவணன் மற்றும் ராஜி இருக்க கதிர் என் புருஷனை ரோட்டில் இறக்கிவிட்டு சென்று இருக்கிறான். அவன் வரட்டும் இன்னைக்கு அவனுக்கு இருக்கு எனத் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
கதிரை செமையாக திட்டிக்கொண்டு இருக்கும் கோமதி அவர் வந்தவுடன் புடவையால் முகத்தை துடைத்து விடுகிறார். கதிரிடம் மெதுவாக நடந்த விஷயங்களை பேசி பாண்டியனை இறக்கிவிட்ட விவகாரம் குறித்து கேட்டு திட்டிவிடுகிறார். இதை பார்த்து சரவணன் மற்றும் ராஜி சிரித்து கொள்கின்றனர்.
பின்னர், ரூமில் ராஜி லோன் குறித்து கேட்க அவரும் என் உழைப்பை பார்த்து லோன் கொடுப்பாங்க. அப்ப நான் அதை வாங்கிக்கிறேன். இனிமே எனக்காக நீ யாரிடமும் சென்று பேசாதே எனக் கூறிவிடுகிறார்.