Siragadikka Aasai: ரோகிணியால் மீண்டும் தர்ம அடி வாங்கிய மனோஜ்… இது என்ன டிசைனோ?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மனோஜை படுக்க போட்டு இருக்க ரோகிணியிடம் என்னை தூக்கு என்கிறார். ஆனால் அவரோ எப்படி போட்டு இருக்காங்கனே தெரியலை. உன்னை தூக்கிறது கஷ்டம் என்கிறார். அப்போ வீட்டிற்குள் முத்து சத்தம் கேட்க அய்யோ இவன் வந்து இருக்கானா என்கிறார்.
ரதி வீட்டுக்கு தீபன் குடும்பத்தினருடன் வருகிறார் முத்து. தீபனை பார்த்தவுடன் ரதி குடும்பத்தினர் எகிறிக்கொண்டு வர நடுவில் புகுந்த முத்து அவன் உங்க பொண்ணை விரும்பி இருக்கதால தானே இவ்வளவு தூரம் வந்து இருக்கான். பொறுமையா இருங்க என்கிறார்.
மற்றும் தீபன் குடும்பத்தினர் உள்ளே வரும் இருவரும் மாற்றி மாற்றி திட்டிக்கொண்டு இருக்கின்றனர். ரோகிணி இதை ஒட்டிக்கேட்டு மனோஜிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். கொஞ்சம் பொறுமையாக இருந்த முத்து நடுவில் புகுந்து நிறுத்துங்க. நானும் பார்த்துட்டே இருக்கேன் பேச தானே வந்தோம்.
பொறுமையா உக்காந்து பேசுங்க. இல்ல போலீஸ் ஸ்டேஷன் போவோம். இவங்க ரெண்டு பேருமே மேஜர். அவங்களே கல்யாணம் செஞ்சி வச்சிடுவாங்க என்கிறார். இதில் இருவீட்டினரும் அமைதியாக இருக்க அவர்களை மாடிக்கு அனுப்பி பேசி வைக்கிறார் முத்து.
கோயிலில் பார்வதியுடன் வரும் விஜயா மண் சோறு சாப்பிடுகிறார். அதை பார்க்கும் மீனாவின் அம்மா என்ன ஆச்சு சம்மந்தி எனக் கேட்க விஜயா முகம் மாறுகிறது. பார்வதி ஒரு பையன் எனச் சொல்ல வர அவரின் வாயை அடைத்து விடுகிறார்.
இப்போ என்ன கஷ்டம் இருந்தா உங்களுக்கு சந்தோஷமா இருக்குமா எனக் கேட்கிறார். அப்படியில்லை எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். பார்வதி, ஏன் இப்படி பேசுற எனக் கேட்க அவ பொண்ணுக்கிட்ட போய் அப்படியே சொல்லுவா என்கிறார். ரதி மற்றும் தீபன் வீட்டினர் பேசி கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர்.
அவர்கள் சிரித்து பேசி முத்துவிடம் நன்றி சொல்கின்றனர். அப்போ ரதி அம்மா நீங்க நல்லவரா இருக்கீங்க. உங்க அண்ணன் சரியில்லை என்கிறார். ஏன் என்ன ஆச்சு எனக் கேட்க ஐடியா கொடுக்கிறேன் என இங்க வந்தார். இங்க தான் கட்டி போட்டு இருக்கோம் எனக் கூற முத்து, மீனா சந்தேகமாக செல்கின்றனர். ரோகிணி ஐயோ நம்மளை பத்திதான் சொல்றாங்க என்கிறார். உள்ளே வரும் முத்து மனோஜை பார்த்து கடுப்பாகிறார்.
அவர் கட்டை பிரித்து எழுப்பி விட்டு எதுக்கு இப்படி செஞ்ச எனக் கேட்க அம்மாக்காக என சமாளித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வெளியில் அழைத்து வருகிறார். மனோஜிடம் நான்தான் பேசிக்கிறேனு சொன்னேனே என முத்து கேட்க ரோகிணிதான் அம்மாக்கிட்ட நல்ல பேரு வாங்க ஐடியா கொடுத்தாள் என்கிறார்.
பின்னர் வீட்டில் சொல்லிடாதேடா. எனக்கு அசிங்கமா போய்டும் எனக் கூற இதை சொன்னா எனக்குதான் அசிங்கமா போகும் எனத் திட்டிவிட்டு செல்கிறார். அருகில் இருக்கும் ரோகிணி என்ன அப்படியே போட்டுவிடுற எனத் திட்டி அடித்துவிட்டு போகிறார்.