மனைவியை கோர்ட்டு வளாகத்தில் வைத்தே குத்திக்கொன்ற கணவன் – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலத்தில், கோர்ட்டு வளாகத்திலேயே விவாகரத்து கேட்ட மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயின் கபீர் நகர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (39) லாரி டிரைவர்.இவர் 2017ஆம் ஆண்டு லெட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 வயது மகள் உள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ், அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, லெட்சுமி மகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
2022ஆம் ஆண்டு, விவாகரத்து மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.லெட்சுமியின் விவாகரத்து வழக்கு இன்று (29.7.2025) கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.லெட்சுமி தனது மகளுடன் கோர்ட்டிற்கு வந்திருந்தார்; சந்தோஷும் அங்கு இருந்தார்.
விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென சந்தோஷ் தன் பையில் மறைத்து கொண்டுவந்த கத்தியை எடுத்து மனைவியை மகள் கண்முன்னே பலமுறை குத்தினார்.முகம் மற்றும் வயிற்றில் பலத்த குத்து காயங்களுடன் லெட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
மகள் கண்முன்னே கொலைசம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள் அலறி ஓடியதால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.லெட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தார்.
சந்தோஷ் கைது:கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற சந்தோஷை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.சந்தோஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.