தேனிலவு சென்ற தம்பதி மரணம்: சுற்றுலா நிறுவனத்திற்கு ₹1.60 கோடி இழப்பீடு செலுத்த கோர்ட்டு உத்தரவு!
தேனிலவுக்காக இந்தோனேசியா சென்ற டாக்டர் தம்பதி, கடலில் படகு சவாரியின் போது படுகடலில் மூழ்கி உயிரிழந்த வழக்கில், சுற்றுலா நிறுவனத்தின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தீர்மானித்து, அந்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:சென்னீற்குப்பத்தை சேர்ந்த திருஞானசெல்வத்தின் மகள் விபூஷ்னியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன், கடந்த 2023-ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு, தேனிலவுக்காக இந்தோனேசியா பயணித்தனர். அங்கு, கடலில் படகு சவாரியின் போது ‘போட்டோ ஷூட்’ நடத்தும் நேரத்தில் திடீரென அலைகளால் பாதிக்கப்பட்டு நீரில் விழுந்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சுற்றுலா நிறுவனம் பாதுகாப்பான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறியது என்றும், விபத்துகள் நிகழ்ந்த பகுதிக்கே அழைத்துச் சென்றது என்றும் குற்றம்சாட்டி, திருஞானசெல்வம் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையில், சுற்றுலா நிறுவனம் “தாங்கள் வழங்கிய எச்சரிக்கைகளை தம்பதி பின்பற்றவில்லை” எனத் தங்களது பதில் மனுவில் கூறியது. ஆனால், சேவை குறைபாடும், அஜாக்கிரதையும் தான் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கோர்ட்டு தீர்மானித்தது.
இதையடுத்து தீர்ப்பில் கூறியதாவது,சேவை குறைபாட்டுக்காக ₹1.5 கோடிமன உளைச்சலுக்காக ₹10 லட்சம் எனமொத்தம் ₹1.60 கோடி இழப்பீடு வழங்க சுற்றுலா நிறுவனத்துக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.