கடவுளுக்கு நிகர்னு ஏன் சொல்லுறாங்க தெரியுமா..? நிலநடுக்கத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்யும் ரஷ்ய மருத்துவர் மற்றும் நர்ஸ்; இணையத்தில் வைரலான வீடியோ..!

Hero Image

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில்,  8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அப்போது ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால், மிக அறுவை சிகிச்சை செய்வதற்கு  சவாலை எதிர் கொண்டுள்ளனர்.

குறித்த மருத்துவமனையில் இருந்து வெளியாகியுள்ள சிசிடிவி வீடியோவில், நில அதிர்வுகள் ஏற்பட்டபோதும், மருத்துவர்கள் குழு  பதற்றம் அடையாமல் நோயாளிக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

View this post on Instagram

A post shared by Business Today (@business_today)


அதில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு உதவியாக நான்கு நர்ஸ்கள் உடன் இருக்கின்றனர். நில அதிர்வுகளின் போது, அவர்கள் நோயாளி படுத்திருக்கும், கட்டிலை இறுக்கிப் பிடிக்கும் காட்சி வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்துள்ளது.மருத்துவர்கள் தனது பணியை அர்ப்பணிப்புடன் பணி செய்யும் இந்த வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.