''இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளோம்'': மத்திய அரசு..!
இந்தியாவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதாவது, 'இந்தியா மீதான அமெரிக்கா விதித்த வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-p94wg.png&w=750&q=15)
அத்துடன், கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாகவும், இதனால், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனைப் பாதுகாக்க அரசு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் போல, இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.