ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்,திருச்சூரைச் சேர்ந்த ரோகிணி (30), இவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.கணவர் ராஜேஷ், பால் பண்ணை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் இரண்டரை வயது குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்து, சென்னையில் இருக்கும் ராஜேஷின் தந்தையை பார்க்க இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டனர்.
கழிவறைக்கு சென்றவர் திரும்பவில்லை,ரெயில் ஜோலார்பேட்டை நிலையத்தை கடந்து சென்ற பின்னர், ரோகிணி கழிவறைக்கு சென்றார்.நீண்ட நேரமாக இருக்கைக்கு திரும்பாததால் கணவர் ராஜேஷ் தேடிப் பார்த்தும் காணவில்லை.
உடனே காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுப்பு.இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரித்ததில், அது ரோகிணி என்பதும், ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
உயிருக்கு போராடியும் உதவி கிடைக்கவில்லை:விசாரணையில், ரோகிணி தவறி விழுந்த பிறகு உயிருக்கு போராடிய நிலையில் எழுந்து சிரமப்பட்டு நடந்து எதிர்திசை தண்டவாளத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
ஆனால் அங்கு யாரும் உதவிக்காக வரவில்லை; முடியாமல் விழுந்து உயிரிழந்தார்.சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற ரோகிணியின் திடீர் மரணம், அவரது குடும்பத்தினரையும், உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ரெயில்வே தண்டவாள பாதுகாப்பு மற்றும் உடனடி மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.