பிரம்மபுத்திரா நதியில் உலகில் மிகப்பெரிய அணைக்கட்டும் பணியை தொடங்கிய சீனா: இந்தியா மற்றும் அண்டைய நாடுகள் அதிர்ச்சி..!
உலகில் மிக பெரிய அணையை பிரம்மபுத்திரா நதியில் கட்டும் பணியை சீனா தொடங்கியுள்ளமை இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் யார்லங் சாங்போ நதியில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் பிரமாண்டமான அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. அருணாச்சலம் பிரதேசத்துக்கு அருகில் ஓடும் இந்த நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது.
சீன பிரதமர் லீ கெச்சியாங் கடந்த சனிக்கிழமை அன்று குறித்த அணை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த அணை கட்டப்பட்டால் இந்தியா மட்டும் வங்க தேசத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டப்படுவது குறித்து கடந்த ஆண்டு இந்தியா, சீனாவிடம் கவலை தெரிவித்தது. ஆனால், இந்த அணைக்கட்டுவது குறித்து எந்த கவலையும் வேண்டாம் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
திபெத்தில் சீனா அணைக்கட்டுவது குறித்து எந்த கவலையும் வேண்டாம் என்றும், பிரம்மபுத்திரா ஒரு வலிமையான நதி, இந்த நதி ஒரே ஒரு நீர் ஆதாரத்தை மட்டுமே சார்ந்தது இல்லை என்றும், பிரம்மபுத்திராவின் நீரோட்டத்தை சீனா தொந்தரவு செய்தால், தண்ணீர் வரத்து குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அணையின் விளைவாக பல்லுயிர் பெருக்கம் குறையும் என்றும், அங்கு பிரமாண்டமான அணை கட்டப்படுவதை குறித்து சீனாவுடனும், நம் அண்டை நாடுகளுடனும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கும் தான் நம்புபதாக கூறியுள்ளார்.