சென்னையில் தாறுமாறாக தண்ணீர் லாரியை ஓட்டியதால் விபத்து! இருவர் பலி
சென்னையில் பூந்தமல்லி பகுதி அருகே கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் 2 நபர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவமானத, சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் ஒரு பெண் மீது கடுமையாக மோதியுள்ளது.இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த தேவி என்ற பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதனால் அப்பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்தனர்.மேலும்,தண்ணீர் லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், விசாரித்ததில் ஓட்டுநர் போதையில் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
அதுமட்டுமின்றி, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகியுள்ளது.இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விபத்து குறித்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் செய்வதறியாது கதறுகின்றனர்.