என்னை மன்னிச்சிடுங்க… நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்… திருமணமான 10 நாளில் 2 மாசம் கர்ப்பம்… காதலனை விடாமல் துரத்தி பணம் பறித்த புது மாப்பிள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. சேகர் என்பவர், தர்மபுரியில் ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சேலத்தில் பணிபுரிந்த காலத்தில், தன்னுடன் பணிபுரிந்த திருமணமாகாத பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தர்மபுரிக்கு பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்ட சேகர், குடும்பத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தார்.
இதற்கிடையில், அந்த பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணமான 10 நாட்களிலேயே அந்த பெண் வாந்தியெடுத்ததுடன் மருத்துவ பரிசோதனையில் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை, மனைவியிடம் விசாரித்தபோது உண்மையை சொல்லி, மன்னிப்புக் கேட்டதால், கருவை கலைக்க முடிவு செய்தார். இந்தச் செயலுக்காக மனைவியுடன் சேர்ந்து சேகரிடம் ரூ.80,000 வாங்கி வைத்தனர்.
இந்நிலையில், மாப்பிள்ளையுடன் சென்ற கோபால் என்ற நண்பர், அந்த சந்திப்பை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு, சேகரிடம் தொடர்ந்து பணம் பறிக்கத் தொடங்கினார். ரூ.80,000 முதல் தொடங்கிய பணவசூலி, நாளடைவில் ரூ.9 லட்சம் 80 ஆயிரமாக உயர்ந்தது. தொடர்ந்து, ரூ.10 லட்சம் தராவிட்டால் உன்னுடைய பழைய புகைப்படங்களை வெளியிடுவோம் என மிரட்டல்களுக்கு ஆளாகிய சேகர், கடைசியில் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
சேகர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோபால் மட்டுமல்லாமல், ரவுடிகள் பாஸ்ட்புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகியோரும் இதில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். தற்போது அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த சம்பவம், ஒருபக்கம் திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் நடந்த அதிர்ச்சியும், மறுபுறம் பழைய உறவினால் ஏற்படும் பாதிப்புகளும் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை காட்டுகிறது. சேகர் ஒருபக்கம், “ஒரு பெண்ணுடன் பழகியதற்காக ரூ.9.80 லட்சம் செலவழித்துவிட்டேன்” என வேதனைப்பட்டு கதிகலங்கி வருகிறார். இச்சம்பவம் தற்போது அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.