பள்ளி முடிந்து வந்த அண்ணன் மகன்கள்….. சுத்தியலால் கொடூரமாக தாக்கிய சித்தப்பா….! அலறி துடித்து பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் யாதவகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சான்பாஷா. இவர் தனது குடும்பத்துடன் ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையான காம சந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி தியானா. இந்த தம்பதியினருக்கு முகமது இஷாக்(9), முகமது ஜுனேத் (7), முகமது ரோஷன்(6) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்த சிறுவர்கள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்த வருகின்றனர்.
அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டில் சான் பாஷாவின் சகோதரர் காசிம் தனது தாயுடன் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட காசிம் அவுபோது வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார், சான் பாஷா தனது தம்பியை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமை சான்பாஷாவும் தியானாவும் வேலைக்கு சென்றனர். அந்த சமயம் மதியம் பள்ளி முடிந்து சிறுவர்கள் மூன்று பேரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது கதவை திடீரென மூடி வெறி பிடித்தது போல நடந்து கொண்ட காசிம் மூன்று சிறுவர்களையும் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கடந்த மூன்று சிறுவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முகமது இஷாக், முகமது ஜுனேத் ஏற்பகவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.