அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… இனி இவர்களுக்கு சரண் விடுப்பு சலுகை கிடைக்கும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!!

அரசு ஊழியர்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 53 சதவீதம் அகவிலைப்படியை போலவே தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 53 சதவீத டிஏ உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அடுத்ததாக சரண் விடுப்பு முக்கிய கோரிக்கையாக உள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பு எடுக்காத நாட்களை ஒப்படைத்து அதற்கு பணமாகப் பெற முடியும். அந்த வகையில் ஒரு ஊழியர் தனது சம்பாதித்த விடுப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் சரண் செய்யலாம்.
இதற்கு எதிராக அந்த விடுப்பு நாட்களுக்கான சம்பளத்தை பணமாகப் பெறலாம். அந்த வகையில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சரன் விடுப்பு திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. இதையடுத்து வருகிற 2026 ஆம் ஆண்டு முதல் இந்த சரண் விடுப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபாண்டில் அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதை அடுத்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் சரண் விடுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.