அடக்கொடுமையே…!! விமானத்தில் திடீர் தீ விபத்து…. குழந்தையை விட பை தான் முக்கியமா…? தந்தையின் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்கா செல்வதற்காக டென்வர் விமான நிலையத்தில் புறப்பட்டுப் போக முயன்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் (AA3023), ரன்வேயில் புறப்பட்டவுடன் லேண்டிங் கியர் (Land Gear) பழுதடைந்ததால், திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்தவர்கள், அவசர வழி மூலமாக தற்காப்பாக கீழே குதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.
இந்த சமயத்தில் எடுத்த வீடியோவொன்றில், ஒரு ஆண் பயணி தனது பைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தையை பக்கத்திலேயே சாய்த்து வைத்து, பையை தக்க வைத்துக்கொண்டே சறுக்கி இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது. அவர் பையை ஒரே கையில் வைத்துக் கொண்டு, குழந்தையை மறுக்கையில் வைத்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது, பையின் எடை மற்றும் சறுக்கும் வேகம் காரணமாக அவர் கீழே விழுந்துவிட்டார். இதனால் குழந்தை விடாமல் அழுதது. அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்கு பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதுடன், அந்த தந்தையின் செயல்முறையை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒருவர், “தயவுசெய்து இந்த தந்தையை போல இருக்காதீர்கள்… உங்கள் பையை விட உங்கள் குழந்தையை முதலில் கவனிக்க வேண்டும். இரண்டையும் சமமாக கையாள முடியாது. இது போன்ற தவறுகள் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “விமானம் புறப்படும் முன் சொல்லப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை ஏன் மக்கள் கேட்க மாட்டாங்க? அவசரநிலையில் தனிப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்துக்கொள்ள கூடாது என்பதுதானே முதன்மை விதி!” என கண்டிப்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், விமானத்தில் பயணம் செய்யும் போது பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. விமான ஊழியர்கள், அவசரநிலையில் எப்படி பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பதற்கான தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினாலும், சிலர் அதை புறக்கணிப்பது மற்றவர்களுக்கே ஆபத்து ஏற்படுத்தும் என்று விமான அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.