எம்ஜிஆர் காலம் வேறு, இப்போ காலம் வேறு : விஜய்க்கு குஷ்பு அட்வைஸ்!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றும் முதல் அறிக்கையில் தெரிவித்தார். அதன்பிறகு கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணிகளில் தவெக தீவிரம் காட்டியது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநில மாநாட்டில் பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் விஜய் அறிவித்தார்.
அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜக மீது விமர்சனங்களை முன்வைக்காத நடிகர் விஜய், ஒவ்வொரு விவகாரத்திலும் திமுக மீது காட்டமான விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக மத்திய அரசு சார்ந்த பிரச்னைகளிலும் கூட மாநில அரசை விஜய் விமர்சிக்கத் தவறுவதில்லை. இதனால் பாஜகவின் பி டீமாக விஜய் செயல்பட்டு வருகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின. அதே சமயம் விஜய் களத்தில் இறங்காமல் அறிக்கை அரசியல் மட்டுமே செய்துவருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. எனினும், கடந்த இரண்டு மாதங்களாக கள அரசியலில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
திமுகவை வீழ்த்த மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வியூகம் வகுத்து வரும் பாஜக, தவெக தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தது. ஆனால், தவெக தலைமையில்தான் கூட்டணி என்றும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் எனவும் அக்கட்சி வெளிப்படையாக அறிவித்துவிட்டது. தற்போது தவெக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் குஷ்பு அளித்த பேட்டியில், “விஜய் எனக்கு ஒரு தம்பி மாதிரி. அவர் தற்போதுதான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு வந்த உடனேயே வெற்றி கிடைக்காது. விஜய்க்கு அது நன்றாகத் தெரியும். வெளியே இருந்தபடி அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லாமல் விஜய் இறங்கி வேலைப் பார்க்கிறார், அது நல்லதுதான். அரசியல் ரீதியாக வேறு இடத்தில் இருந்தாலும் தம்பி என்கிற முறையில் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
Videoதேர்தலில் வெற்றி, தோல்வி எல்லாமே மக்களின் கைகளில்தான் உள்ளது. வெற்றியா, தோல்வியா என்று ஒரு அறையில் அமர்ந்து சொல்லிவிட முடியாது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. சினிமாவில் மிக உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றிவாய்ப்பு கிடைத்தது இல்லை. அதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உள்ளன. எம்.ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலம் வேறு, ஆனால் இப்போதைய காலம் வேறு மாதிரியாக உள்ளது. அந்த காலங்களில் மக்கள் மனநிலை வேறு மாதிரி இருந்தது, இப்போது மக்களின் மனநிலை வேறு மாதிரி உள்ளது” என்று கருத்து தெரிவித்தார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றிய நடிகை குஷ்பு 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பிறகு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எனினும், தனக்கு பாஜகவில் முக்கியத்துவம் இல்லை என்று கடந்த ஆண்டு வெளிப்படையாகவே பேசினார். அவர் தவெகவில் இணையப்போவதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜகவில் மாநிலத் துணைத் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story