''நெல்லை கவின் குமார் ஆணவ வழக்கு..'' சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது- தீவிரமடையும் விசாரணை!

Hero Image
தூத்துக்குடி மாவட்டம் அடுத்த ஆறு மங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 26 வயதில் கவின் குமார், செல்வகணேசன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கலந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு தனது தாத்தாவுடன் சென்றுள்ளார்.



நெல்லை கவின் குமார் ஆணவ வழக்குஅப்போது மருத்துவமனை வளாகத்தில் சுர்ஜித் என்று இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித் கவின் குமார் கண்ணில் மிளகாய் பொடியை தூவி சாலையில் ஓடு ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்தார். இதனை அடுத்து சுர்ஜித் குமாரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 24 வயதான கல்லூரி மாணவர் சுர்ஜித் என்பது தெரியவந்தது. இவரது தாய் மற்றும் தந்தை காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்தது.



பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கொலை?மேலும் கவின் குமார் கொலை செய்யப்பட்டது குறித்து சுர்ஜித் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். கவின் குமாரும் தனது அக்காவும் பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாக பழகி வந்துள்ளனர் ஒரு கட்டத்தில் இந்த வழக்கம் காதலாக மாறியது. கவின்குமார் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் (அதாவது தேவேந்திர குல வேளாளர் ) இந்த காதலுக்கு சுர்ஜித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சுஜித் குமார் தனது அக்காவுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கவின் குமாரிடம் பலமுறை எச்சரித்து உள்ளார் ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாத கவின் குமார் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வந்து உள்ளார்.



வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்இந்த நிலையில் சம்பவத்தன்று, மருத்துவமனையில் பணியில் இருந்த பொழுது அப்பெண்ணெய் சந்தித்து கவின் குமார் பேசி உள்ளார் இதனை அறிந்த சுர்ஜித் மருத்துவமனை வளாகத்திற்கு வந்து கண்ணில் மிளகாய் பொடி தூவி அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.இதனை தொடர்ந்து சுர்ஜித் பெற்றோர் தூண்டுதலின் பேரில் தான் இந்த கொலை நடந்ததாக கவின்குமார் பெற்றோர் குற்றம்சாட்டினர். மேலும் அவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



தந்தை சரவணன் கைது இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது. பின்னர் சுர்ஜித்க்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து குற்றம்சாட்டபட்ட சுர்ஜித் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி காவலர் பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்ய வேண்டும் என்று கவின்குமார் பெற்றோர் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், தற்பொழுது தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த விசாரணையில் கவின்குமார் கொலை வழக்கில் அடுத்தடுத்த உண்மைகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.