புதுச்சேரியில் மகளிருக்கு அடித்தது அதிர்ஷ்டம்... அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை... அசத்தல் அறிவிப்பு!

Hero Image
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு...புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுவதாக கடந்த 2022-2023 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அரசிடமிருந்து எந்த விதமான உரிமைத் தொகையும் பெறாத மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.



தவளக்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாஇந்த நிலையில், புதுச்சேரியில் தவளக்குப்பத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில், புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்று ஆதி திராவிட சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.



அனைத்து மகளிர்களுக்கும் மாதாந்திர உதவித் தொகைஇதைத் தொடர்ந்து, அந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.



தகுதி உடைய மகளிர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகைபுதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கான உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.



புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் - சலுகைகள்இது தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு அரசு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முந்தைய காலங்களில் புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்களுக்கு அதிக அளவிலான திட்டங்களும், அறிவிப்புகளும், சலுகைகளும் வழங்கப்படும். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் புதுச்சேரி மக்களை ஏக்கத்துடன் பார்ப்பார்கள்.



புதுச்சேரி மக்களை ஏக்கத்துடன் பார்க்கும் தமிழக மக்கள் இதேபோல, தமிழகத்தில் குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டுமே மகளிர் தொகை வழங்கப்படும் நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் அனைத்து மகளிர்க்கும் ரூ.ஆயிரம் மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தது புதுச்சேரி மக்களை மீண்டும் தமிழக மக்கள் ஏக்கத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.