சென்னை To திருப்பதி தேசிய நெடுஞ்சாலை : பணிகள் எப்போது முடியும்? - வெளியான முக்கிய அப்டேட்
நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையிலும் தமிழகத்தில் அனைத்து நகரங்களையும் இணைக்கும் வகையில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருவதோடு, பழைய சாலைகளை புதுப்பிக்கும் பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உறுப்பினர்கள் நவாஸ் கனி, செல்வம், சி.என்.அண்ணாதுரை ஆகியோர், தமிழகத்தில் சாலை வசதித் திட்டங்கள், குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் முன்மொழியப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்களைக் கேட்டிருந்தனர்.
சாலைப் பணிகள் - மத்திய அரசு எழுத்துப்பூர்வமான பதில்
இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் திருப்பதி -திருத்தணி - சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 205 விரிவாக்கப் பணிகளுக்கு 467.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், திருவள்ளூர் பைபாஸில் நான்கு வழிச் சாலை, வேப்பம்பட்டு பைபாஸ், சேவப்பேட்டை பைபாஸ் என 17.52 கி.மீ தூரத்திற்கான பணிகள் மீதம் முடிக்க வேண்டியுள்ளது.
84 சதவிகித பணிகள் நிறைவுபெற்றன
இந்த திட்டத்தில் 84 சதவிகித பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதம் 16 சதவிகித பணிகள் மட்டுமே முடிக்க வேண்டியுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த சாலை பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. விரைவில் சாலைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் ஆன்மீகவாதிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருப்பதி - திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலை
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து திருப்பதி வெறும் 133 கி.மீ தூரம் என்பதால் வார இறுதி நாட்களோ அல்லது விடுமுறை நாட்களோ பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்துவிடுகிறார்கள்.
Videoசென்னை முதல் திருப்பதியை இணைக்கும் முக்கிய சாலையாக தேசிய நெடுஞ்சாலை 205 இருந்து வருகிறது. வேறு வழித் தடங்கள் இருந்தாலும் அவை சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதால் பக்தர்கள் பெரும்பாலும் சென்னை - திருத்தணி - திருப்பதி வழித் தடத்தையே தேர்வு செய்கிறார்கள். அதே சமயம் இந்த வழித் தடத்தில் திருத்தணியில் முருகன் கோயில் இருப்பதால் அங்கும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் திருத்தணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.
பயண நேரம் குறைவு : பக்தர்கள் எதிர்ப்பார்ப்பு
சாலைப் பணிகளை விரைவில் முடிந்து திறக்கப்பட்டால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் நேரம் முன்பு இருப்பதை விட 20 - 30 நிமிடங்கள் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு வர முடியும்.

Next Story