தமிழகத்தை உலுக்கிய ஆணவ கொலை.. கவின்குமார் காதலிக்கு கௌசல்யா போட்ட பதிவு - வைரல்!

Hero Image
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். அவர் சென்னையில் உள்ள ஒரு IT நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கவின் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை ஆணவக் கொலை செய்துள்ளார். சுர்ஜித்தின் பெற்றோர் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.



கவின்குமார் ஆணவ கொலை இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவின் பற்றி அந்தப் பெண் காவல்துறையிடம் சில தகவல்களை கூறியதாக இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா அந்தப் பெண்ணுக்கு ஒரு ஃபேஸ்புக் பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:



கவினின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்"தோழிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். என்ன நடந்தாலும் நீங்கள் கவின்குமார் பக்கம் இருக்க வேண்டும். இங்கு கொலைசெய்யப்பட்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்!" என்று வலியுறுத்தியுள்ளார்.காதலன் கொல்லப்பட்ட இந்த துயரமான நேரத்தில், அந்தப் பெண் கவினின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்று கௌசல்யா கேட்டுக்கொண்டுள்ளார்.



அப்படி நின்றால், அந்த பெண்ணுக்கு ஏற்படும் சவால்களை பற்றியும் கௌசல்யா பேசியுள்ளார். அப்படிச் செய்தால் என்னுடைய வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.சங்கரை இழந்த பிறகு தான் அனாதையாக நின்றதை கௌசல்யா நினைவு கூர்ந்துள்ளார். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்கள் தன்னை அரவணைத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். சாதியை தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் தன்னால் வாழ முடிகிறது என்றும், அதற்கு தோழர்களே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.



சங்கரின் வழக்கில் நான் பொய் சொல்லவில்லைஅவர்கள் தன்னை மகளாக பார்த்து, சுயமரியாதையுடன் வாழ உதவி செய்வதாகவும் கௌசல்யா குறிப்பிட்டுள்ளார்."எந்தக் ஒரு குற்ற உணர்வும் இல்லை. மேலும் நீதியின் பக்கமும் என்னுடைய காதலின் பக்கமும் தான் என்னால் உறுதி வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன்" என்று கௌசல்யா கூறியுள்ளார்.தன்னை போல் அந்த பெண்ணையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள் என்று கௌசல்யா கூறியுள்ளார்.



எந்த அழுத்தம் தரப்பட்டாலும் கவினுக்காக துணிவோடு நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். "உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!" என்று கௌசல்யா அந்த பெண்ணுக்கு உறுதியளித்துள்ளார். "நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன்.



தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!" என்று கௌசல்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கவினின் மரணத்திற்கு நீதி கிடைக்க, அந்தப் பெண் தைரியமாக சாட்சி சொல்ல வேண்டும் என்று கௌசல்யா வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.கௌசல்யா, சங்கர் ஆணவக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.