Change sunsign
கன்னி

06-12 October, 2025

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். ஆனாலும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை அடியோடு மாறும். முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்திலிருந்து இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சஞ்சலம் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.